இந்து சமயத்தின் தர்ம உணர்வும் சைவ சமயத்தின் பக்தி உணர்வும் யூத சமயத்தின் பணிவு உணர்வும் கிறித்துவ சமயத்தின் அன்பு உணர்வும் இஸ்லாம் சமயத்தின் சகோதர உணர்வும் சீக்கிய சமயத்தின் கடமை உணர்வும் புத்த சமயத்தின் கருணை உணர்வும் சைன சமயத்தின் அகிம்சை உணர்வும்...
பின்னிப் பிணைந்த பீடுயர் கலவைதான் சன்மார்க்கம் என்னும் சமத்துவச் செந்நெறி! தன்னை எப்படித் தழுவிப் போற்றிக் கண்ணே போலக் காக்கின் றோமோ... அதுபோல் பிறஉயிர் அனைத்தும் கருதும் பொதுநிலைக்குப் பேர் ..புதிய சன்மார்க்கம்!
பன்மார்க் கத்தின் பண்புகள் யாவும் தன்மார்க் கத்தில் தழைப்பதைச் சொல்லி நன்மார்க் கத்தை நாடுக என்றும் புன்மார்க் கத்தைப் போக்குக என்றும் அருட்பா வாயிலாய் அறிவிக்கின்ற.... அருள்நெறிச் சித்தரை;அகிலத் தெங்கும் இருள்நெறி துடைத்து எழில்நெறி ஏற்ற வருபக லவனாய் வந்துதித் தாரை
அருமையாய்க் கிடைத்த அறக்கொடை யாகப் பெருமையாய் எண்ணிப் பின்பற்று வோமே!
இந்து சமயத்தின் தர்ம உணர்வும்
ReplyDeleteசைவ சமயத்தின் பக்தி உணர்வும்
யூத சமயத்தின் பணிவு உணர்வும்
கிறித்துவ சமயத்தின் அன்பு உணர்வும்
இஸ்லாம் சமயத்தின் சகோதர உணர்வும்
சீக்கிய சமயத்தின் கடமை உணர்வும்
புத்த சமயத்தின் கருணை உணர்வும்
சைன சமயத்தின் அகிம்சை உணர்வும்...
பின்னிப் பிணைந்த பீடுயர் கலவைதான்
சன்மார்க்கம் என்னும் சமத்துவச் செந்நெறி!
தன்னை எப்படித் தழுவிப் போற்றிக்
கண்ணே போலக் காக்கின் றோமோ...
அதுபோல் பிறஉயிர் அனைத்தும் கருதும்
பொதுநிலைக்குப் பேர் ..புதிய சன்மார்க்கம்!
பன்மார்க் கத்தின் பண்புகள் யாவும்
தன்மார்க் கத்தில் தழைப்பதைச் சொல்லி
நன்மார்க் கத்தை நாடுக என்றும்
புன்மார்க் கத்தைப் போக்குக என்றும்
அருட்பா வாயிலாய் அறிவிக்கின்ற....
அருள்நெறிச் சித்தரை;அகிலத் தெங்கும்
இருள்நெறி துடைத்து எழில்நெறி ஏற்ற
வருபக லவனாய் வந்துதித் தாரை
அருமையாய்க் கிடைத்த அறக்கொடை யாகப்
பெருமையாய் எண்ணிப் பின்பற்று வோமே!