Friday, October 17, 2014

கலியுக முடிவின் குறிப்பு

முதல் யுகத்திற்கு நாள் 8. 2-வது யுகத்திற்கு நாள் 6. 3-வது யுகத்திற்கு நாள் 4. 4-வது யுகத்திற்கு நாள் 2.

ஆகக் கூடிய நாள் 20-ம் கற்பம் முடிக்கக் கூடும் நாட்கள்.

60X60X60=2,16,000 நொடி ஒரு நாள். அதாவது நாள் ஒன்றுக்கு நாழிகை 60, நாழிகை ஒன்றுக்கு வினாடி 60, வினாடி ஒன்றுக்கு நொடி 60 என்றபடி.
நாளிரண்டிற்கு 4,32,000 நொடி.

இந்த 4,32,000 நொடியும் அத்தனை வருடமாகக் கலியுகத்திற்குச் சொல்லியிருக்கிறது.

ஆனால் இந்தக் கலியுகத்திற்கு வருடம் ஐயாயிரந்தான் (5000).
இந்தக் கலியுகம் முடிவதற்கு இன்னம் இருபத்தேழு வருடமிருக்கிறது.
இந்த ஐயாயிர வருஷமும் ஜீவித்திருக்கும்படி, கலியுகத்திற்குக் குறித்த நாளிரண்டில் கல்பஞ் செய்து தேகசித்தியைப் பெற்றுக்கொண்டு, நம்முடைய கண்ணுக்குத் தோற்றாமல் வேறு வடிவத்தோடு இருக்கிறவன் கலியுக புருஷன்.

இவனுடைய சங்கல்ப விகற்பங்களால் இந்த உலகம் இப்போ தசைவு பெற்றிருக்கின்றது.

இந்த உலகம் சன்மார்க்க உலகமாக மாறுவதற் கின்னும் பன்னிரண்டு மாதமிருக்கிறது. 


குறிப்பு
-----------
8 days (களங்க மார்க்கம்)
6 days (திராவக மார்க்கம்)
4 days (நவநீத மார்க்கம்)
2 days ( பஸ்ம மார்க்கம்) 27 வருடம் முடிவுக்கு இருக்கிறது.
சித்தன் - கலிபுருஷன் (முடிவுக்கு மேல் புருஷன் செயல் நடவாது)
1 day hours 60 seconds 216,000 x 2 days = 432000 second

60 நாளிகை x 60 வினாடி x 60 நாடி = 216,000 x 2 days = 432,000 second.

இந்த உலகம் சன்மார்க்க உலகமாக இன்னும் 12 மாதமிருக்கிறது.
From October 1872 - 1873 = 12 MONTH.

Written on:-
17th October 1872
ஆங்கீரச வருஷம் புரட்டாசி மாதம் 3ஆம் நாள்.

No comments:

Post a Comment