முதல் யுகத்துக்கு நாள் 8, இரண்டாவது யுகத்துக்கு நாள் 6, மூன்றாவது யுகத்துக்கு நாள் 4, நாலாவது யுகத்துக்கு நாள் 2, ஒரு தினத்திற்கு நாழிகை 60, நிமிஷம் 2,16,000. இரண்டு நாளைக்கு 4,32,000 நிமிஷம். இவ்வண்ணமே 4,6,8, முதலியவற்றிற்கும் கொள்க.
ஆக நாள் 20-க்கு நிமிஷம் 43,20,000. இதைக் குழுக்குறியில் வருஷமாகச் சொன்னது.
முதல் யுகம் களங்க மார்க்கம்; இரண்டாவது யுகம் திராவக மார்க்கம்; மூன்றாவது யுகம் நவநீத மார்க்கம்; நாலாவது யுகம் பஸ்ம மார்க்கம்.
ஆதலால், மேற்குறித்த பஸ்மத்தை மேற்குறித்த வருஷத்தில் முடித்து உட்கொண்ட புருஷனாகிய சித்தனுக்குக் கலிபுருஷனென்னு நாமம் வந்தது. மேற்படி பஸ்மத்தை இரண்டு தினத்தில் முடித்து கற்பங்கொண்டு தேகசித்தியைப்பெற்றுத் திரிசியப்படாமல், மேற்படி புருஷன் தனது சங்கல்ப விகல்பங்களால் இவ்வுலகத்தைத் தோன்றலாதி அசைவுகள் செய்வித்து ஆடுகின்றான்.
இந்தவுலகம் முடிவதற்கு இன்னும் 27 வருடம் இருக்கின்றது: இதற்குமேல் மேல் புருஷன் செயல் நடவாது; ஞான சித்தன் செயல் உண்டாம்.
குறிப்பு:-
------------
- 8 days (களங்க மார்க்கம்)
- 6 days (திராவக மார்க்கம்)
- 4 days (நவநீத மார்க்கம்)
- 2 days ( பஸ்ம மார்க்கம்) 27 வருடம் முடிவுக்கு இருக்கிறது.
- சித்தன் - கலிபுருஷன் ( முடிவுக்கு மேல் புருஷன் செயல் நடவாது )
- 1 day - 60 hours - 216,000 seconds x 2 days (பஷ்ம மார்க்கம்) = 432,000 second. (இதை வருஷமாக சொன்னது )
No comments:
Post a Comment