Showing posts with label Garuda Puranam. Show all posts
Showing posts with label Garuda Puranam. Show all posts

Friday, April 17, 2026

முரணாகிறது - ஸ்ரீ கருட புராணம். ப.68

தனக்கு தன்னுடைய ஆன்மாவே புத்திரனாக ஜனித்தல் உண்மை. ஆகையால் புத்திரன் இறந்து விட்டான் என்றால், அந்த புத்திரனுக்கு அவனுடைய தந்தையும், தந்தை மாய்ந்தால் அவனுடைய புத்திரனும் கர்மம் செய்ய வேண்டும்.ஒருவன் தனக்குத் தானே புத்திரன் ஆகிறான் என்று வேதஞ் சொல்லுகிறது. - ஸ்ரீ கருட புராணம். ப.68

இந்த கருத்தில் எனக்கு முற்றிலும் உடன்பாடில்லை. அனுபவ சாத்தியர்களின் (ஞானிகளின்) விளக்கத்தின் படி ஆன்மாவிற்கு பந்தம் இல்லை. தந்தை மகன் என்ற உலக பந்தம் கிடையாத பட்சத்தில் எவ்வாறு  சமகாலத்தில் தந்தையும் இறவாமல், அவரது ஆன்மாவாக புத்திரன் பிறப்பார்? முரண்பட்ட கருத்தாகிறது.

ஸ்ரீ கருட புராணம்